சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழ்மன்ற விளையாட்டு போட்டி

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் 29ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ்மன்றம் 22வது தடவையாக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் எதிர்கால சந்ததியினருக்கு தாய் மொழியை கற்பிப்பதில் அதிக பங்காற்றி வரும் லுட்சேர்ன் தமிழ்மன்றம் விளையாட்டு மற்றும் கலைகளை வளர்ப்பதிலும் அதிக பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

இன் நிகழ்வானது லுட்சேர்ன் தமிழ்மன்ற தலைவர் தியாகராஜா தருமபாலன் தலைமையில் நிருவாகத்தினர் - ஆசிரியர்கள் - மாணவர்கள் - பழைய மாணவர்கள் - பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கலகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி சுஜாராணி வரதராஜா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.

லுட்சேர்ன் மாநிலத்தை அண்மித்த மாநிலங்களையும் இணைத்து வருடாந்தம் நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டிகள் வழமை போன்று இம்முறையும் வெகு சிறப்பாக அமைந்துள்ளது.