பேர்ன் ஞானலிங்கேஸ்வரத்திற்கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் சிறப்பு வருகை!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இக்னாச்சியோ காசிஸ் கடந்த 28ம் திகதி செந்தமிழ்த் திருமறையில் கருவறையில் தமிழ் வழிபாடு நடைபெறும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகைத்தந்திருந்தார்.

பேர்ன் மாநிலத்தில் 2007ம் ஆண்டுமுதல் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. பல மாநில, நகர, உள்ளூர் ஆட்சிமன்ற உறுப்பினர்களும், வெளிநாட்டுத் தூதுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக ஞானலிங்கேச்சுரத்திற்கு வருகை அளித்திருந்தாலும் நடுவன் அரசின் 7 அமைச்சர்களில் ஒருவர் பதவியில் இருந்துகொண்டு கோவிலுக்கு விருந்தினராக வந்திருப்பது இதுவே முதற்தடவை ஆகும்.

இத்தாலி நாட்டில் இருந்து லுயீனோ எனம் ஊரில் புலம்பெயர்ந்து ரிச்சீனோ மாநிலத்தில் அமைந்துள்ள செஸ்சா எனும் ஊரில் இவரது தந்தை வழிப் பூட்டனார்கள் சுவிற்சர்லாந்தில் குடியேறியிருந்தார்.

காசிஸ் தனது தந்தையப்போல் பிறந்தது முதல் இத்தாலிநாட்டுக் கடவுச்சீட்டைக் கொண்டிருந்தார். 1976ம் ஆண்டு இவரது 3 சகோதரிகளுடன் இவருக்கும் தந்தையின் குடியுரிமை விண்ணப்த்தின் அடிப்படையில் சுவிஸ் குடியுரிமை கிடைத்திருந்தது.

2017ம் ஆண்டு இவர் தனது நடுவன் அமைச்சுப் பதியினைப் பொறுப்பெடுத்ததன் ஊடான தனது இத்தாலிக் குடியுரிமையினை மீளளித்தார்.

1987ம் ஆண்டு சூரிச் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பினை நிறைவுசெய்தார்.

1996 முதல் 2018 வரை ரிச்சீனோ மாநிலத்தின் அரச தலைமை மருத்துவராக விளங்கினார். சுவிற்சர்லாந்து ரிச்சீனோ மலைப்பாதுகாப்புப் பிரிவின் இராணுவத்திலும் தலமைமருத்துவராக மேஜர் பதிவயினை இவர் வகித்திருக்கிறார்.

2004ம் ஆண்டு முதல் 2014 வரை கொலினா டோறோவில் ஊராட்சிமன்ற அரசியிலில் ஈடுபட்டுப் பின்னர் 2007 முதல் சுவிற்சர்லாந்துப் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கி 2017ம் ஆண்டு 18 ஆண்டுகள் கடந்து ரிச்சீனோ மாநிலத்தைப் பிரதிநிதிப்படுத்தி இவர் நடுவன் அரசியில் அமைச்சராகப் பதிவி ஏற்றார்.

இவரது சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) முதலாளிகள் நலனைப் பேணுவதை முதன்மை நோக்காகக்கொண்டிருக்கிறது. சாதராண விவசாயியாகக் குடியேறிய வழித்தோன்றலில் இவர் மருத்துவம் கற்று, இன்று வெளிவிவகார அமைச்சராப் பதிவி வகிப்பது சுவிசில் குடியேறியவர் முன்மாதிரியாக கொள்ளலாம்.

வெளிவிவகாரக் துறைசார் குழுக்கூட்டத்தை வெளிவிகார அமைச்சர் வெவ்வேறு இடங்களில் இடங்களில் நடாத்துவது வழமை. இம்முறை உயேன் அவர்களின் அழைப்பினை ஏற்று 28.11.2019 வியாழக்கிழமை மாலை 16.00 மணிக்கு வருகை அளித்திருந்தார்.

பல்சமய இல்லத்தின் பெயரால் மருத்துவகலாநிதி திருமதி உயேன், கலாநிதி பிறிக்கிற்ரா, சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் உற்சாக வரவேற்பினை அளித்தனர்.

வெளிவிகார அமைச்சர் சுவிஸ் நாடாளுமன்னறத்தில் இருந்து புறப்பட்டு தனது குழு உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் பொதுப்போக்குவரத்து திறாம் வண்டியில் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆள்த்தியது.

சீருடைய அணிந்த பாதுகாப்பு அதிகாரிகளும் அணிவகுத்து வரவில்லை. வழமையாக தூதுவர்கள் வந்தால் காவற்துறை வண்டிகூடிய முன்றலில் நிறுத்தப்படுவது, அதுவும் நடைக்கவில்லை.

பொன்மாலை வேளை சிறுதுளி மழை தூவ சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் தனக்குத் தானே குடைபிடித்துக்கொண்டு பல்சமய இல்லத்திற்குள் நுழைந்தார். அனைவர் முகத்திலும் ஆச்சரியம் விரிவடைந்தது!

நிறைவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்குள் நுழைந்து கோவிலை மிகுந்த விருப்புடன் கண்டு இரசித்தார். திருக்கோவில் தொண்டர்களும், தமிழ் அருட்சுனையர்களும் திழ்ப்பண்பாட்டு முறைப்படி வரவேற்பினை அளித்தனர்.

சைவநெறிக்கூடத்தின் நடுவன் அமைச்சருடனான தனிப்பட்ட சந்திப்பின்போது தற்போதைய ஈழத்தமிழர் சமூக, அரசியல் சூழல் நிலை எமது பார்வையில் எனும் பெருளில் திரு. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களால் இயல்பாக இத்தாலி மொழியில் எடுத்துரைக்கப்பட்டது.

கரிசனையுடன் கருத்துக்களை அமைச்சர் செவிமடித்தார். இவருடன் வெளிவிவகாரப் பணியத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளும் வருகை அளிதிருந்ததால், கோவில் சமயம் தொடர்பான பொதுவிளக்கம் யேர்மன் மொழயில் அளிக்கப்பட்டது, பிரெஞ்மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழ்க்கோவிலுக்கு முதன்முதலில் வருகை அளித்த சுவிஸ் அரசின் அமைச்சருக்கு பூமாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது.

மிகுந்த நிறைவுடன் விடைபெற்றார் வெளிவிவகார அமைச்சர். தமிழர் பெருவிழா தைப்பொங்லுக்கு நடுவன் அரசின் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் சைவநெறிக்கூடத்தால் பொது அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்பில் இருப்போம் - மீண்டும் சந்திப்போம் எனும் வார்த்தைகளுடன் நிகழ்வு நிறைவுற்றது.