இலங்கையின் புலனாய்வு அதிகாரிகளுடன், சுவிஸின் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து விசாரணை

Report Print Ajith Ajith in சுவிற்சர்லாந்து

சுவிஸ் தூதரத்தின் பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தை அடுத்து இலங்கையின் புலனாய்வு அதிகாரிகளுடன், சுவிஸின் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே சுவிஸின் புலனாய்வு அதிகாரிகள் இலங்கை வந்திருந்தனர்.

இதன்போது சுவிஸின் புலனாய்வு அதிகாரிகள் சுயமான தடயத்தேடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த பெண் பணியாளர் பொய்யான வாக்குமூலம் வழங்கிய விடயம் வெளியாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.