சுவிட்ஸர்லாந்து பேர்ன் ஞானலிங்கேஸ்வரத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவெம்பாவை ஆதிரைத் திருநாள்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
65Shares

சுவிட்ஸர்லாந்து பேர்ன் ஞானலிங்கேஸ்வரத்தில் திருவெம்பாவை ஆதிரைத் திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

திருவெம்பாவைத் திருநோன்பு கடந்த 01. 01. 2020 முதல் கடைப்பிடிக்கப்பட்டு, இன்றைய நாள் காலை 04.00 மணிமுதல் சிறப்பு அருள் வழிபாடு நடைபெற்று, அடியார்கள் தம் கரங்களால் தாமே இறைவனுக்கு திருச்சடங்குகளை ஆற்றியுள்ளனர்.

இதன்போது இளையவர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஆதிரைத்திருகாட்சி காண ஞானலிங்கேஸ்வரத்தில் கூடி திருவெம்பாவை ஓதி இறைவனின் அருளை பெற்றுள்ளனர்.