ஜெர்மனி சுவிட்சர்லாந்த், பிரான்ஸ், ஒஸ்ரியா என அனைத்து எல்லைகளையும் மூடுகிறது

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. உலகம் முழுவதும் அவசரகால நிலை உள்ளது.

புதிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. 125 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் 142,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 5,000 க்கும் மேற்பட்டோர் வைரஸால் இறந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழ் நிலையை அடிப்படையாக கொண்டு ஜெர்மனி தனது அனைத்து எல்லைகளையும் மூடுகிறது என்ற முடிவை எடுத்துள்ளது.

இந் நடைமுறைகளை திங்கள், காலை 8 மணி முதல், ஜெர்மனி பிரான்ஸ், ஒஸ்ரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளை மூடுகிறது.