சுவிட்ஸர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்

Report Print Murali Murali in சுவிற்சர்லாந்து

சுவிட்ஸர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அண்மையில் சுவிஸில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, முகக்கவசம் அணிந்தமையின் காரணமாக சுமார் 10 வீத மக்கள் மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகக்கவசம் அணிபவர்களை வேறு ஒருவராக பார்க்கப்படுவதாகவும், நகைப்புடன் சிரிக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, நாளை மறுதினம் முதல் வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிற்கு வருகை தரும் பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் வந்ததை தொடர்ந்து இந்த முகக்கவச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பிரித்தானியாவில் சினிமா திரையரங்குகள், இறுதி சடங்கு நடக்கும் இல்லங்கள் மற்றும் ஸ்காட்லாந்தில் வங்கிகள், அழகு நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.