சுவிஸ் நாட்டினை வந்தடையவுள்ள மனிதநேய ஈருருளிப்பயணம்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
31Shares

14ஆம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று பிற்பகல் நான்கு மணிக்கு சுவிஸ் நாட்டினை வந்தடையவுள்ளது.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நேற்று தொடங்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் fergersheim மாநகரசபை முன்னதாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன்போது அரசியல் சந்திப்புக்களாக Sélestat, Colmar மாநகரசபைகளின் நகரபிதாக்களை சந்தித்து 72 வருட காலமாக இலங்கை பேரினவாத அரசினால் தொடரும் வன்முறைகள், இனவழிப்பு மற்றும் தமிழீழ தேசத்தின் தற்கால நிலை என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு தமிழர்களின் நியாயமான வேண்டுகோளை எடுத்துச்செல்வதாக நம்பிக்கை வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.

அதை தொடர்ந்து Mulhouse நோக்கி பிரான்ஸ் காவல்துறையின் பாதுகாப்புடன் தொடங்கிய மனித நேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் battenheim என்ற இடத்தில் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று காலை France Mulhouse மாநகரசபையில் எமக்கான நீதியின் குரலினை மாநகர முதல்வரிடம் பதிவு செய்து தொடர்ச்சியாக, Saint Louis மாநகரசபையில் எமது தமிழீழ மக்களின் இனவழிப்பிற்கான நீதியினை கேட்டு, அனைத்துல சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனுகையளிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து எம் இலக்கிற்கான பயணம் Basel மாநகரத்தினை ஊடறுத்து தொடரும்.