கொட்டும் பனியிலும் யாழ்.பல்கலைக்கு ஆதரவாக ஐ.நா முன்றலில் போராட்டம்

Report Print Banu in சுவிற்சர்லாந்து
722Shares

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் கொட்டும் பனிக்கு மத்தியிலும் இன்றையதினம் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இவ் ஆர்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியை பல்கலைக்கழக நிர்வாகம் தகர்த்தமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தகர்க்கப்பட்ட தூபியை மீளநிர்மாணிக்கக் கோரி மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட உணவுத்தவிர்ப்பு போராட்டத்தின் காரணமாக தூபியை மீளநிர்மாணிப்பதற்காக அடிக்கல் பல்கலைக்கழக துணைவேந்தரால் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.