சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தினால் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு புதிய நடைமுறைகள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
73Shares

சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய நடவடிக்கைகள் சில அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி (பொருளாதார அமைச்சர்) கை பார்மலின் (Guy Parmelin) தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறைகள்,

1. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர ஏனைய கடைகள் அனைத்தும் வருகின்ற திங்கட்கிழமையில் (18.01.2021) இருந்து மூடப்படும்.

2. வருகின்ற திங்கட்கிழமையில் (18.01.2021) இருந்து வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்யும் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. இவை சாத்தியமான இடங்களில் மாத்திரம் கணிசமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

3. திங்கட்கிழமையில் (18.01.2021) இருந்து வேலைத்தளங்களில் ஒரு அறையினுள் ஒருவருக்கு மேல் கடமையாற்றுவதாயின் முக்க்கவசம் (Mask) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4. கலாச்சார நிலையங்கள், விளையாட்டு கூடங்கள், உணவகங்கள் மற்றும் கழியாட்டகூடங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.