சுவிஸில் இலங்கை குடிமகன் கைது: அதிர வைக்கும் பின்னணி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து இலங்கையில் இருந்து நபர்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் Biel நகரில் இலங்கையை சேர்ந்த 27 வயதான நபரும், இவருக்கு உதவியாக செயல்பட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 24 வயதான நபரும் வசித்து வந்துள்ளனர்.

இருவரும் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து இலங்கையில் இருந்து நபர்களை சுவிஸ் நாட்டிற்கு கடத்தி வருவதை முக்கிய தொழிலாக செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ரகசிய தகவல் பெற்ற பொலிசார் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இத்தகவலை தற்போது தான் அதிகாரப்பூர்வமாக பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசார் வெளியிட்ட தகவலில், ‘சுவிஸில் போலியான கடவுச்சீட்டுகளை தயாரித்து வந்துள்ளனர்.

இவரது ஆலோசனையின் பேரில் இலங்கையில் நபர்கள் விமானம் மூலம் துபாய், கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணமாகின்றனர்.

பின்னர், தரை வழியாக ஈரான் அல்லது துருக்கி நாடு வழியாக செங்கன் நாடுகளுக்கு கடத்தி வருகின்றனர்.

இவர்களுக்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டுகளை அவர்களுக்கு கொடுத்து சுவிஸ் நாட்டிற்குள் கடத்தி வர இருவரும் உதவியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2015 ஆகஸ்ட் முதல் 2016 மே மாதம் வரை இவர்கள் இருவரும் எண்ணற்ற நபர்களை சுவிஸ் நாட்டிற்கு கடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலதிக விவரங்களுக்கு - http://www.20min.ch/schweiz/bern/story/Bieler--27--schleuste-Sri-Lanker-illegal-ein-21090787

Comments