செங்காலன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
70Shares

ஐரோப்பாவில் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்கும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேகதின மணவாளக்கோலத்திருவிழா பங்குனி உத்தர சுபநாளான 20.03.2019 அன்று புதன்கிழமை பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

அன்று காலை 8.30 மணிக்கு சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்துள்ள தமிழக கௌமாரமட மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் அருளாசியுடன் திருவிழா ஆரம்பமானது.

'சிவாகம ரத்னம்' 'வேதாகம விசாரதா' ஸ்ரீ ராமு (என்கிற) அகத்தீஸ்வரக்குருக்கள் தலைமையில் சூரிச் முருகன் ஆலய பிரதமகுருவான சிவாகம பாஸ்கரர் வி.கல்யாணக்குருக்கள் மற்றும் ஆறு குருமார்கள் ஒன்று சேர்ந்து 1008 சங்காபிஷேகத்தை நடத்தினர்.

சங்காபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை பிள்ளையார், முருகன், அம்பாள் மற்றும் சுற்றுப்புற மூர்த்திகளுக்கும் விசேட அபிசேகம் நடைபெற்றது.

அபிசேகத்தைத் தொடர்ந்து மகாபூர்ணாதியாகி கும்பங்கள் மங்களவாத்தியம் முழங்க வீதிவலம் எடுத்துவரப்பட்டன.

பின்னர் பிள்ளையார், துர்க்கையம்மன், மூலமூர்த்தி முருகன் மற்றும் சுற்றுப்புற மூர்த்திகளுக்கும் மூலஸ்தான கலசத்திற்கும் விசேட கும்பாபிசேகம் இடம்பெற்றன. சங்காபிஷேகத்தையடுத்து விசேட பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. வசந்தமண்டப பூசையை அடுத்து சண்முகார்ச்சனை இடம்பெற்றது.

கின்வில் துர்க்கை அம்மன் ஆலய ஆதீனகர்த்தா சரகணபவானந்தக்குருக்கள் வருகை தந்து சிறப்பு ஆசியுரை வழங்கிச் சிறப்பித்தார்.

ஸ்ரீ ராமு (என்கிற) அகத்தீஸ்வரக்குருக்கள் (லண்டன்), வி.கல்யாணக்குருக்கள் ( சூரிச் முருகன் கோவில்), தியாகபுஸ்பானந்தசர்மா ( அரோ ), பிரம்மஸ்ரீ வாமதேவசர்மா (ஜேர்மனி), பிரசாதனன் சர்மா (ஜேர்மனி), கௌசிக்சர்மா (டென்மார்க்), இரா.சந்திரகாந்தக்குருக்கள் (பிறிபேர்க் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்) ஆகியோர் இணைந்து சண்முகார்ச்சனையை பக்தி பூர்வமாக நடத்தினர்.

இரவு விசேட பூசைகள் இடம்பெற்று கதிர்வேலர் உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.