விமானிகள், தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க முடிவு!

Report Print Kamel Kamel in போக்குவரத்து

விமானிகள், தொழிற்சங்கப் போராட்டமொன்றில் குதிக்கத் தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் குடிபோதையில் இருக்கின்றார்களா என்பது குறித்து சோதனை நடத்த, உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளை பின்பற்ற வேண்டுமென விமானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை முன்வைத்து நாளை முதல் நேரத்திற்கு வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையை விமானிகள் முன்னெடுக்கவுள்ளனர்.

குடி போதையில் விமானியொருவர் விமானத்தை செலுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, விமானிகள் குடிபோதையில் இருக்கின்றார்களா என்பதனை கண்டறிவதற்காக ஏற்றுக்கொள்ளப்படாத முறைகளின் ஊடாக விமான நிலையப் பாதுகாப்புத் தரப்பினர் சோதனை நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமானிகளை சோதனையிடுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. எனினும் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட வேண்டுமென விமானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முறையற்ற சோதனைகளை எதிர்த்து நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க விமானிகள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு உரிய பதிலளிக்கப்படாவிட்டால் கடுமையான போராட்டம் நடாத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments