போதையில் வாகனம் செலுத்திய 10 பேர் தருமபுரத்தில் வசமாக சிக்கினர்

Report Print Rakesh in போக்குவரத்து

அனுமதிப்பத்திரம் மற்றும் தலைகவசம் இன்றி மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் கடந்த மூன்று நாள்களுக்குள் 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு தருமபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசேட வீதிச் சோதனையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்குடன் தருமபுரம் பொலிஸாரால் இந்த விசேட வீதிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் வாகன அனுமதிப் பத்திரம் மற்றும் தலைக்கவசம் இன்றிப் பயணித்த குற்றத்திலும் ஈடுபட்டார்கள்.

அவர்கள் செலுத்திய 10 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப் பட்டுள்ளன.

கைது செய்யப் பட்டவர்களில் சிலர் கிளிநொச்சி நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் தண்டமும் விதித்தது என்றார்.

Latest Offers

loading...

Comments