விமானிகள் போராட்டம்! இலங்கைக்கான விமான பயணங்களில் தடை ஏற்படக்கூடும்!

Report Print Samy in போக்குவரத்து

ஸ்ரீலங்கன் விமான விமானிகள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்தல் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எதிர்வரும் காலத்தில் இலங்கைக்கான விமான பயணங்களில் தடை ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான விமானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமோ அல்லது அரசாங்கமோ இதுவரை தமது கோரிக்கைகளுக்கு பதில் வழங்காமையினால் எமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் அநுர அபேசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜெர்மனி பிராங்போட் விமானநிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு அமைவாக விமானிகளிடம் மீண்டும் மதுபான பரிசோதனையை ஆரம்பிப்பதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்தமையை தொடர்ந்து இவ்வாறு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தோடு, ஒத்துழைத்து பணியாற்றப் போவதில்லை என்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக, எதிர்வரும் நாட்களில், விமானப் பயணங்கள் தாமதமாகக்கூடும் என்று ஸ்ரீ லங்கன் விமான விமானிகள் அமைப்பு தெரிவிக்கின்றது.

தங்களது கோரிக்கைகளுக்கு, இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.இதனடிப்படையில் இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் எந்தவிதமான இறுதி தீர்மானங்களும் எடுக்கப்படாமலுள்ள நிலையில் ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது இவ்விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களோ தலையிட்டு உடனடியான தீர்மானத்துக்கு வர வேண்டும்.

அவ்வாறின்றேல் இவ்போராட்டம் தீவிரமடையும் சூழ்நிலையே காணப்படுகின்றது என்றார்.

இந்நிலையில் இரண்டாவது வாரமாக தொடரும் குறித்த போராட்டம் காரணமாக விமானிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு இதனால் இலங்கைக்கான விமான போக்குவரத்தில் பல தடவைகள் கால தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You may like this video

பன்னவெட்டுவான் கிராம மக்களை சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரிக்கை

Latest Offers

loading...

Comments