ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி ஆறரை கோடி ரூபா செலவில் வெளிநாட்டு விஜயம்!

Report Print Kamel Kamel in போக்குவரத்து

மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் ஆறரை கோடி ரூபா செலவில் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

மத்திய மாகாணசபையின் 58 உறுப்பினர்களும், 8 உயரதிகாரிகளும் இவ்வாறு ரஸ்யாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

முதல் கட்டமாக 29 மாகாணசபை உறுப்பினர்களும் ஒரு சிரேஸ்ட அதிகாரியும் நாளை ரஸ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

மத்திய மாகாணசபையில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத அளவிற்கு கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலைமை காணப்படுகின்றது.

மக்கள் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலைமைகளின் கீழ் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

58 மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் 8 அதிகாரிகளுக்கான பயண செலவாக 650 லட்சம் ரூபாவினை மத்திய மாகாணசபை ஒதுக்கீடு செய்துள்ளது.

மாகாணசபைகள் பற்றிய அறிவினையும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணசபை நிதி நெருக்கடி நிலையில் இருக்கும்போது இவ்வாறு பாரிய செலவில் வெளிநாட்டு விஜயம் மேற்கொள்வது எவ்வளவு நடைமுறைச் சாத்தியப்பாடுடையது என மாகாணசபையின் சில அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, இந்த விஜயத்திற்கான நிதி மாகாணசபையின் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டதாகவும், விஜயத்திற்கான அனுமதி கிரமமான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாகாண சபையின் பிரதம செயலாளர் சரத் பிரேமவன்ச தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments