நெற் களஞ்சியமாக்கப்பட்ட விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு சென்ற 48 பயணிகள்!

Report Print Vethu Vethu in போக்குவரத்து
179Shares

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புனரமைப்பு நடவடிக்கை முன்னெடுப்பதால் ஏப்ரல் மாதம் வரை காலை நேரங்களில் விமான சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்டுநாயக்கவுக்கு வருகைத்தரும் பல விமானங்கள் தங்கள் பயண அட்டவனையை மாற்றியுள்ள போதிலும், சில விமானங்களுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

கட்டுநாயக்கவில் இருந்து பீஜிங் மற்றும் ஷெங்காய் வரை பயணிக்கும் ஸ்ரீலங்கன் விமானங்கள் இரண்டின் அட்டவனை மாற்றப்படாமையினால், விமான பயணங்கள் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பீஜிங் நோக்கி பயணித்த விமானத்திற்கு மத்தல விமான நிலையத்தில் 35 பயணிகள் இணைந்திருந்ததாகவும், ஷெங்காய் நோக்கிய பயணிப்பதற்கு 13 பேர் மத்தலவில் இணைந்திருந்ததாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளே டுபாய் விமானம் ஒன்று தினமும் மத்தலவுக்கு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் அதற்காக 7 பயணிகள் பயணிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டுள்ள காலப்பகுதியினுள் இந்த விமான எல்லையில் பயணிக்கும் விமானங்களின் பயணிகள் சுகயீனமடைந்தால் அல்லது வேறு தொழில்நுட்ப கோளராறுகள் ஏற்பட்டால், அதற்காக மத்தல விமான நிலையத்தை பயன்படுத்த நேரிடும்.

அத்துடன் அங்கு ஏ380 போன்ற பாரிய விமானங்கள் உட்பட தரையிறக்க கூடிய வசதிகள் அங்கு காணப்படுகின்றது.

Comments