ஜனாதிபதியின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு போக்குவரத்துச் சேவை ஆரம்பிப்பு

Report Print Theesan in போக்குவரத்து
70Shares

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதேச மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று(09) பிற்பகல் 1.00 மணியளவில் போக்குவரத்துச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹன புஸ்பகுமாரவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு பொதுமக்கள், பாடசாலை மாணவர்களின் நலன் கருதி வவுனியா கிடாச்சூரிக்கான இ.போ. ச. போக்குவரத்துச் சேவை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இ.போ. ச சாலையினால் ஒரு நாளைக்கு மூன்று சேவையினை வவுனியா கிடாச்சூரிக்கு வழங்க உள்ளதாக சாலை முகாமையாளர் டி.எம். எஸ். சொய்சா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார், இ.போ. ச சாலை உத்தியோகஸ்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தற்போது வவுனியா கிடாச்சூரிக்கான சேவையினை தனியார் பேருந்துக்களே மேற்கொண்டு வருகின்றதுடன் அதில் பெருமளவானவர்கள் பேருந்திற்கு வெளியே மேலேயும் அமர்ந்து பயணத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments