போக்குவரத்தில் ஈடுபட்ட அரச பேருந்து திடீரென மாயம்! தேடுதலின் பின்னர் காலிமுகத்திடல் அருகில் கண்டுபிடிப்பு

Report Print Ramya in போக்குவரத்து
175Shares

காணாமல் போன மஹரகம போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மீட்கப்பட்டுள்ளது

குறித்த பேருந்து காலிமுகத்திடல் அருகில் கைவிடப்பட்ட நிலையில் இன்று(12) மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹரகமயிலிருந்து அவிசாவளை நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இனந்தெரியாத நபர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் இரவு உணவு அருந்துவதற்காக, விடுதி ஒன்றின் முன் குறித்த பேருந்தை நிறுத்தியுள்ளனர்.

இரவு உணவின் பின்னர் பேருந்தை காணவில்லை என மஹரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் குறிந்த பேருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருந்தை கடத்திச் சென்ற நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Comments