வவுனியா - ஏ9 வீதி வைத்தியசாலைக்கு அருகே இன்று (12 ) மதியம் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் கயமடைந்துள்ளார்.
மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஏ9 வீதிக்கு செல்ல முற்பட்ட போது வவுனியாவிலிருந்து ஒமந்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.