மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லடி இராமகிருஸ்ணமிசனுக்கு அருகில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளர்.
இதன்போது, மோட்டார் சைக்கிள் கடும் சேதங்களுக்குள்ளானதுடன், காரும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மதுபோதையில் காணப்பட்டதாக சம்பவத்தினைக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.