வவுனியாவில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்களுக்கான அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதே வேளை குறித்த கலந்துரையாடலில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், புதிய பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டது.
அமுல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைவாக இன்று காலை முதல் தனியார் மற்றும் அரச பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் ஒருவாரத்திற்கு சேவை மேற்கொள்வதற்கும் இணங்கியுள்ளன.
இருப்பினும், நேற்று அரசாங்க அதிபருடன் கலந்துரையாடலுக்குச் சென்ற வவுனியா வர்த்தகர் சங்க உறுப்பினர்களை கலந்துரையாட அனுமதிக்காமல் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பழைய பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளூர்களுக்கான சேவைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.