நானுஓயா பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயம்

Report Print Thirumal Thirumal in போக்குவரத்து
24Shares

நுவரெலியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (08) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணியும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

முச்சக்கரவண்டியின் தடுப்புக்கட்டை செயலிழந்ததன் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளதனால் வீதி விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்திற் கொண்டு விபத்துகளை தடுக்கும் வகையில் சாரதிகளுக்கு தெளிவுப்படுத்தும், எச்சரிக்கை விளம்பர பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகன சாரதிகளும் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு சாரதிகளிடம் போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments