இலங்கையின் பிரதான வீதிகளில் நவீன பஸ்கள்

Report Print Vethu Vethu in போக்குவரத்து
2076Shares

இலங்கையில் இலத்திரனியல் பஸ் சேவையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் இலத்திரனியல் பஸ் சேவையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது

அதற்கமைய இலங்கைக்கு 1000 பஸ்கள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 5 வீதிகளில் இலத்திரனியல் பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுவலக நேரத்தை அடிப்படையாக கொண்டு பஸ் சேவையை செயற்படுத்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பஸ்களில் பயணிக்கும் போது பயணிகளிடம் சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறிவிட நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments