10 நாட்களுக்கு மேலாக வீதியில் கிடக்கும் மரம்: அகற்ற முன் வராத அதிகாரிகள்

Report Print Ashik in போக்குவரத்து

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து காணப்படுகின்ற போதும் உரிய அதிகாரிகள் அந்த மரத்தை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக இந்த பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பருப்புக்கடந்தான் கிராம அலுவலகர் பிரிவில் உள்ள வீதியிலே கடந்த 10 நாட்களுக்கு மேலாக மரம் முறிந்து காணப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அருகில் உள்ள பொது மயானத்தினூடாக போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த பொதுமயானத்தில் உள்ள கல்லரைகள் மீது வாகனங்கள் ஏறிச் செல்லுவதினால் கல்லரைகள் சேதமடைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீதி ஆர்.டி.டி.க்கு சொந்தமானதாகவும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்டதாக காணப்படுகின்ற போதும் அந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய இது வரை அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.