கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வாகன நெரிசல்

Report Print Shalini in போக்குவரத்து

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மாவனெல்ல – கனேதென்ன சந்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாகவே இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீதிகளை புனரமைத்து தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் அமர்ந்து மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.