வட மாகாணத்திற்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு

Report Print Vethu Vethu in போக்குவரத்து

வட மாகாணத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி மற்றும் பரசன்கஸ்வெவ ரயில் வீதியில் ரயில் தடம் புரண்டுள்ளதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியில் பயணிக்கும் ரயில்கள் அனுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.