புகையிரத பயணிகளின் முக்கிய கவனத்திற்கு

Report Print Jeslin Jeslin in போக்குவரத்து
91Shares

புறக்கோட்டையில் இருந்து, தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

புகையிரத சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத இயந்திர சாரதிகள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பின் காரணமாக குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடும் 150 நாளாந்த புகையிரத சேவைகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த பிரச்சினையினை சீர் செய்வதற்காகவும், இதற்கு தீர்வு காணும் பொருட்டும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா புகையிரத தொழிற்சங்கங்களுடன் இன்று மதியம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.