ஒரு யானை வீதியை மறிக்க மற்றொரு யானை பஸ் பயணிகளிடம் உணவு கேட்டு தாக்கியது!

Report Print Steephen Steephen in போக்குவரத்து
1290Shares

புத்தல - கதிர்காமம் வீதியின் கோனகங்ஹார கல்கே பிரதேசத்தில் கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற பேருந்து மீது காட்டு யானை தாக்கியுள்ளது.

மூன்று யானைகளை கொண்ட குழுவில் ஒரு யானை பேருந்தை தாக்கியுள்ளது.

கொத்மலை, கெட்டபுலாவ பிரதேசத்தை சாமர சுபாஷித டி சில்வா என்பவரின் பேருந்தே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

தாக்குதலில் சாரதி ஆசனத்திற்கு அருகில் இருக்கும் கதவு மற்றும் யன்னல்கள் சேதமடைந்துள்ளன.

புத்தல - கதிர்காமம் வீதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென காட்டில் இருந்து மூன்று யானைகள் வீதிக்கு வந்துள்ளன.

ஒரு யானை வீதியை குறுக்காக மறித்து கொண்டதும், மற்றுமொரு யானை பேருந்தில் உள்ளவர்களிடம் உணவை கேட்டுள்ளது.

அதில் இருந்த பயணிகள், விளாம்பழம் போன்ற பழங்களை கொடுத்த போதிலும் யானை அவற்றை வாங்க மறுத்துள்ளது.

உணவு கொடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந் யானை பேருந்தை தாக்கியுள்ளது.

பேருந்தில் பயணித்த பெண்ணொருவரின் பொதியை எடுத்துக்கொண்ட யானை அதில் இருந்த சோற்றை உண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.