ஆனையிறவு பகுதியில் வாகன விபத்து! இளைஞர்கள் இருவர் பலி

Report Print Yathu in போக்குவரத்து

கிளிநொச்சி - ஏ9 ஆனையிறவு தட்டுவன் கொட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்களில் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கிளிநொச்சி தட்டுவன் கொட்டிப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரும், கரவெட்டியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக செய்தி - சுமன், மோகன்