கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிலத்தடி குழாய்கள் பொருத்தும் நடவடிக்கை காரணமாக சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அந்த வகையில், கொட்டாஞ்சேனை, அளுத்மாவத்தை, ஹெட்டியாவத்தை சந்தி தொடக்கம் ஹிப்பாவத்தை சந்தி வரையிலான வீதிகள் மூடப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்குறிப்பிட்ட வீதிகள் இன்று இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 8ஆம் திகதி அதிகாலை 5 மணி வரையில் மூடப்படவுள்ளன.
இந்த நிலையில் மூடப்படவுள்ள வீதிகளுக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மக்களுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.