கொழும்பு – சென்னை விமான சேவைகள் பாதிப்பு

Report Print Ajith Ajith in போக்குவரத்து

போகி பண்டிகை கொண்டாட்டத்தால், ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக கொழும்புக்கும், சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கவிருந்த மூன்று விமான சேவைகள் தாமதமாகியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சென்னையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த இரண்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பிலிருந்து சென்னை நோக்கி பயணித்த விமானமொன்று நடுவழியில் திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.