இன்று திறந்து வைக்கப்படுகின்றது மற்றுமொரு மேம்பாலம்!

Report Print Murali Murali in போக்குவரத்து

பொல்கஹவெல மேம்பாலம் பொதுமக்களின் பாவனைக்காக இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்துக் காரணமாக நாளாந்தம் பல மணி நேரம் பொல்கஹவெல வீதி மூடப்படுவதனால், வாகன நெரிசல் ஏற்படுகின்றது. இதன் காரணமாக இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 353 மீற்றர்களாகும்.

இதன் நிர்மாணப்பணிகளுக்கு 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் கொழும்பு - ராஜகிரிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேம்பாலம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers