கோர விபத்தில் சிக்கிய யாழ்.மாணவனுக்கு 3 மாதங்களின் பின் ஏற்பட்ட பரிதாப நிலை

Report Print Shalini in போக்குவரத்து

சிலாபம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் வீதி விபத்தில் சிக்கிய யாழ். மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்று மாதங்களின் பின் நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியில் கல்வி பயிலும் கோப்பாயைச் சேர்ந்த, 18 வயதான சிவானந்தன் மதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சிலாபம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் வீதியை கடந்த போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து குறித்த மாணவனை மோதித்தள்ளி விட்டு சென்றுள்ளது.

விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட மாணவன் ஆராச்சிக்கட்டுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.