நெடுஞ்சாலையில் பயணிக்கும் உங்களை கண்காணிக்கும் நவீன கமரா

Report Print Vethu Vethu in போக்குவரத்து

அதிவேக நெடுஞ்சாலையில் வேக அளவீட்டு இயந்திரக்கட்டமைப்பு இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த கட்டமைப்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த இயந்திரக்கட்டமைப்பு மூலம் வாகனத்தின் வேகத்தை கண்காணிப்பதுடன் வேக வரையறையை மீறும் வாகனங்களின் புகைப்படங்களை உடனடியாக ரெப் கணனியின் ஊடாக பிரதிபண்ணப்படும்.

அத்துடன் வாகன இலக்கம் , கண்காணிக்கப்பட்ட நேரம், அதிவேகம் தொடர்பான தகவல்களும் அச்சிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.