இலங்கை மக்களுக்கு மற்றுமொரு தலையிடி!

Report Print Vethu Vethu in போக்குவரத்து

பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கு 10 வீத உடனடி பேருந்து கட்டண அதிகரிப்பு ஒன்று அத்தியாவசியமாக உள்ளதென சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ரூபாயின் வீழ்ச்சி காரணமாக பேருந்து துறையை முன்னெடுப்பதில் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேருந்து இறக்குமதி மற்றும் மேலதிக பகுதி கொள்வனவு விலைகள் அதிகரிக்கும் என்பதனால் பேருந்து தொழில் துறைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ரூபாய் வீழ்ச்சிக்கு மத்தியில் பேருந்து இறக்குமதியின் போது செலவிடப்படும் பணம் 2 லட்சம் ரூபாயை விடவும் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஜுலை மாதம் முதலாம் தினம் மேற்கொள்ளப்படவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் போது நூற்றுக்கு 10 வீத அதிகரிப்பு ஒன்று அத்தியாவசியம் என கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பேருந்து கட்டணத்தின் பெறுமதியும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers