வெள்ளவாயவில் மண்சரிவு! முக்கிய பாதையில் போக்குவரத்து தடை

Report Print Aasim in போக்குவரத்து

வௌ்ளவாய பிரதேசத்தில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மண்சரிவு காரணமாக முக்கிய வீதியொன்றின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளவாயவில் இருந்து எல்ல செல்லும் வழியில் இன்று மாலை 3.15 மணியளவில் மண்சரிந்து வீழ்ந்து பாதையை மூடியுள்ளது. இதன் போது மரமொன்றும் பாதையில் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பாதை போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளனர்.

வௌ்ளவாய-எல்ல பாதையானது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.