கல்முனை வீதியில் விபத்து! ஒருவர் படுகாயம்

Report Print Nesan Nesan in போக்குவரத்து

சற்றுமுன்னர் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கிராங்குளத்தில் பாரிய வீதி விபத்து ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பு

காத்தாங்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கிராங்குளம் பகுதியில் கார் மற்றும் லொறி இரக வாகனங்கள் இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தாங்குடி பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கல்முனை பகுதியிலிருந்து மூதூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி ரக முன்னால் பயணித்துக் கொண்டிருந்த காருடன் மோதியுள்ளது.

இந்த இவ்விபத்தில் காரில் பயணித்த 35 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை ற்றுவருகின்றதாக காத்தாங்குடி பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சாரதி தூக்க நிலையில் இருந்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.