விமான நிலையம் செல்வோருக்கு மிக முக்கியமான அறிவித்தல்

Report Print Shalini in போக்குவரத்து

விமான பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் இன்றைய தினம் குறிப்பிட்ட நேரத்திற்கு 3 மணித்தியாலத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருகைத் தருமாறு ஸ்ரீலங்கா விமான சேவை தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் நண்பகல் 12 மணிமுதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த நிலை தொடரும் என்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

3 கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் தொழிற்சங்க சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா விமான சேவைகள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளளது.