அதிக வேகத்தின் விளைவு! பரிதாபமாக உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்

Report Print Abdulsalam Yaseem in போக்குவரத்து

திருகோணமலை - கல்லாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவில் பாதுகாப்பு படை வீரரின் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக சேறுநுவர பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சேறுநுவர, சோமபுர, LB 2 பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய எஸ்.டி.புஸ்பகுமார ரணசிங்க என குறிப்பிடப்படுகின்றது.

படை வீரர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் உயிரிழந்த படைவீரரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.