வடமாகாண தனியார் பேருந்துகளிற்கான வழித்தட அனுமதி பத்திரத்தை வழங்கி வைத்த முதலமைச்சர்

Report Print Sumi in போக்குவரத்து

வடமாகாண தனியார் பேருந்துகளிற்கான வழித்தட அனுமதி பத்திரம் இன்று 14 வழங்கி வைக்கப்பட்டது

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் வடமாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் 10.00 மணியளவில் நடைபெற்றது.

ழவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதாக கலந்துகொண்டு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான வழித்தட அனுமதி பத்திரத்தினை வழங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில், வடமாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்க தலைவர் உட்பட யாழ்.மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க தலைவர் மற்றும் முகாமையாளர்கள், ஒவ்வொரு மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க தலைவர்கள், உரிமையாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.