விசேட புகையிரத சேவைகளுக்கான ஏற்பாடுகள்

Report Print Sujitha Sri in போக்குவரத்து

எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை புகையிரத சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த விசேட சேவைகள் பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த பிரிவை சேர்ந்த மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்த விசேட புகையிரத சேவையானது மஹாவயில் இருந்து அநுராதபுரம் வரையிலும், அநுராதபுரத்திலிருந்து மஹாவ வரையிலும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நோன்மதி தினத்தில் அதிகாலை 3.30 இற்கு விசேட புகையிரதம் கொழும்பு - கோட்டையிலிருந்து அநுராதபுரம் வரையில் பயணித்து காலை ஒன்பது மணிக்கு அநுராதபுரத்தை சென்றடையவுள்ளது.

இதேபோன்று கொழும்பு கோட்டையில் இருந்து கனேவத்தை வரையிலும், கனேவத்தையில் இருந்து கொழும்பு - கோட்டை வரையிலும் விசேட புகையிரத சேவை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.