குன்றும் குழியுமாக காணப்படும் தம்பிநாயகபுர கிராம வீதி: மக்கள் பாதிப்பு

Report Print V.T.Sahadevarajah in போக்குவரத்து

மல்வத்தையிலுள்ள, தம்பிநாயகபுர கிராமத்திற்கு செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் தாம் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டிய நிலையுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த கிராமத்திற்கு செல்லும் ஒரேயொரு பிரதான வீதி இதுவாக காணப்படுகிறது. கல்முனை, அம்பாறை பிரதான வீதியிலுள்ள மல்வத்தை சந்தியிலிருந்து இந்த வீதியூடாகவே தம்பிவிநாயகபுரத்திற்கு செல்ல வேண்டும்.

அந்த வீதி இன்று பாவனைக்கு உதவாத வகையில் சேதமாகி காணப்படுகின்றதுடன், வீதியின் சில இடங்களில் பாறைகளும் உள்ளதால் பயணிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே இந்த பகுதி மக்களின் நலன் கருதி, குறித்த பிரதேசத்தை உள்ளடக்கிய சம்மாந்துறை பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.