இரண்டாம் இணைப்பு
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய நால்வரும் வவுனியா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து ஏ9 வீதியின் புளியங்குளம், இராமனூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வானும் நேருக்கு நேர் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.