வழமைக்கு திரும்பியுள்ள மலையகத்திற்கான புகையிரத சேவைகள்

Report Print Thirumal Thirumal in போக்குவரத்து

தடைப்பட்டிருந்த மலையகத்திற்கான புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் நேற்று மாலை 4.30 மணியளவில் ஹட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டிருந்தது.

தற்போது புகையிரத பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், புகையிரதங்களும் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.