இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திய அதிநவீன விமானம்

Report Print Vethu Vethu in போக்குவரத்து

ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் இணைந்த புதிய விமான நேற்றைய தினம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற சர்வமத வழிப்பாடுகளின் பின்னரே இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இது எயார் பஸ் நிறுவனத்தினால் ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையில் தயாரிக்கப்பபட்ட A-321 ரக விமானமாகும்.

இந்த விமானம் எரிபொருளை குறைவாக பயன்படுத்தி பயணிக்க கூடிய முறையில் தயாரிக்கப்பட்ட புதிய நிர்மாணிப்பாகும்.

விமானத்தின் வர்த்தக பிரிவில் 12 பேர் பயணிக்க முடியும். அத்துடன் ஏனைய பகுதியில் 176 பயணிகள் மற்றும் விமான ஊழியர் 6 பேர் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.

உலகின் பல நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற முறையில் இந்த விமானத்திலும் சர்வமத வழிப்பாடுகள் இடம்பெற்றன. அதற்கமைய சர்வ மத ஆசிர்வாதத்துடன் இந்த விமான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

Latest Offers