மதுபோதையில் வாகனம் செலுத்திய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Mubarak in போக்குவரத்து

திருகோணமலை - சேருநுவர பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள இரு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சேருநுவர, கல்லாறு மற்றும் தெஹிவத்தை பகுதியை சேர்ந்த தினும் சம்பத் (வயது 21) மற்றும் ஏ.டி.தரங்க (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

சாரதிகள் இருவரும் மதுபோதையில் முச்சக்கரவண்டிகளை வேகமாக செலுத்தியமையே விபத்து ஏற்பட காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.