பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்படும் வீதி: மக்கள் பாதிப்பு

Report Print Gokulan Gokulan in போக்குவரத்து

பல வருட காலமாக பெரிய கிண்ணியா பெரியபள்ளிவாசல் ஜூம் ஆப் பள்ளிக்கு முன்னால் செல்லும் வீதி உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகின்ற நிலையில் பொது மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதற்கு பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொடர்ந்தும் இந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

கிண்ணியா நகர சபை எல்லைக் கோட்டுக்கு உட்பட்ட பெரிய கிண்ணியா பெரியபள்ளிவாசல் ஜூம் ஆப் பள்ளிக்கு முன்னால் செல்லும் வீதி பல வருட காலமாக உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

மழை காலக்களில் நீர் தேங்கி நிற்பதுடன், குறித்த மழை நீர் ஓடுவதற்கான பொறுத்தமற்ற வடிகான்கள் இல்லாது காணப்படுகின்றது.

அத்துடன், கிண்ணியா நகர சபை அமர்வின் போது, இந்த வீதி புனரமைப்பு தொடர்பான பிரேரணையை நகர சபை உறுப்பினர் முன்வைத்த போதிலும் இது வரை வீதி புனரமைக்கப்படவில்லை.

மேலும், இந்த வீதி வழியாக நாளாந்தம் பயணிக்கின்ற பொது மக்கள் பாரிய அளவு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.