பாடசாலைக்கு ஒன்றாக சென்ற தம்பதி! கணவனின் உயிர் பறிபோன பரிதாபம்

Report Print V.T.Sahadevarajah in போக்குவரத்து

கல்முனையை அடுத்துள்ள சவளக்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாடசாலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியர்களே பேருந்தொன்றை முந்தி செல்ல முயற்சித்த போது இன்று காலை விபத்தில் சிக்கியுள்ளனர்.

அத்துடன் இவர்கள் இருவரும் கணவன், மனைவி எனவும், விபத்தில் கணவன் ஞானமுத்து ஜயந்தசீலன் (வயது 41) பலியாகியுள்ளதுடன், மனைவி தாட்சாயினி (வயது 35) படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை மனைவி கல்முனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers