கொழும்பு போக்குவரத்து சேவையில் ஏற்பட போகும் மாற்றம்

Report Print Steephen Steephen in போக்குவரத்து

கொழும்பில் காணப்படும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இலகு ரக ரயில் பாதை 16 கிலோ மீற்றர் தூரம் வரை நிர்மாணிக்கப்பட உள்ளதுடன் 16 தரிப்பிடங்களும் நிர்மாணிக்கப்பட உள்ளன.

மாலபே பேருந்து சாலை அருகில் இருந்து கொழும்பு கோட்டை வரை 30 நிமிடங்களில் பயணம் செய்யும் வகையில் இந்த இலகுரக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்த திட்டத்திற்கான சுற்றுச் சூழல் பாதிப்புகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலை பளு காணப்படும் நேரங்களில் 4 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் மற்றைய நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் என தரிடப்பிடங்களுக்கு ரயில்கள் வந்து போகும்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் இந்த இலகுரக ரயில் சேவை திட்டம் 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட உள்ளது.