கொழும்புக்கு வந்த புகையிரதத்தில் 17 பேர் கைது

Report Print Shalini in போக்குவரத்து

அளுத்கம புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்தில் பயணம் செய்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி புகையிரத நிலைய பொறுப்பதிகாரி லெஸ்ஸி ஆனந்தவினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 17 பேரும் புகையிரத பற்றுச்சீட்டு இன்றி பயணம் செய்த குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பயணிகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காலி புகையிரத நிலைய பொறுப்பதிகாரி லெஸ்ஸி ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.